திருச்சி மாநகர கமிஷனர் ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிக்கை வௌியிட்டுள்ளார்…. அவர் கூறியதாவது…. காவல்துறையுடன் இணைந்து குற்றத்தடுப்பு, பாதுகாப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை வட்டாரதளபதி (பெண் ) காலியிடம் -1 பூர்த்தி செய்யப்பட உள்ளது. 18-50 வயதுக்குள் இருக்க வேண்டும். திருச்சி மாநகரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குற்ற வழக்குகள் எதிலும் சம்பந்தப்பட்டவராக இருக்க கூடாது. எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருக்க கூடாது.
வி்ண்ணப்பிக்கும் முறை… பெண் விண்ணப்பதாரர்கள், தங்களது வயது, கல்வித்தகுதி, தற்போது பணிபுரியும் விபரம் , குடும்ப அட்டை, விளையாட்டு சான்றிதழ் ஆகிவற்றுக்கான அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் சுய விபரப்பட்டயலுடன் கூடிய முகவரி எழுதப்பட்ட விண்ணப்பத்தை வட்டார தளபதி, ஊர்க்காவல்படை அலுவலகம், கண்டோன்மெண்ட், திருச்சி மாநகரம் 10.12.2023 தேதிக்குள் அனுப்ப வேண்டும். என இவ்வாறு தெரிவித்துள்ளார்.