கரூர் மாநகர் பகுதியில் உள்ள முக்கிய வீதியான ஜவஹர் பஜார் பகுதியில் நேற்று இரவு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்கள் நடந்து செல்லும் பாதை மற்றும் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தது, இந்நிலையில் காவலர்களுடன் ஆய்வு பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், இடையூறுராக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தது,ஒரு சில வாகனங்களை அங்கேயே அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் காலை ஓரத்தில் நனி நபர்கள் வைத்து இருந்த இரும்பு பலகையும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் இரும்பு பலகையை கரூர் நகர காவல் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது, இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தவும், மீறி நிறுத்தினால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்தார்.