மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாத நிலையில் தற்போது நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், செம்பனார்கோவில், மங்கநல்லூர், பெரம்பூர், மன்னம்பந்தல், வில்லியநல்லூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமழை பெய்து வருகிறது.
மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை நிலவரப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழையளவு .
மயிலாடுதுறை1.62 செ.மீ.,
மணல்மேடு 5.90 செ.மீ.,
சீர்காழி 2.94 செ.மீ.,
கொள்ளிடம் 3.8 செ.மீ.,
பொறையார் 5செ.மீ.,
செம்பனார்கோயில் 1.36 செ.மீ.,
மாவட்டத்தில் சராசரியாக 2.52
செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை குத்தாலம் தாலுகா விவசாயிகளுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது.