புதுக்கோட்டை மாவட்டம். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம். மாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின்கீழ், ரூ.3.81 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள 18 வகுப்பறை கட்டடப் பணிக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை
அமைச்சர் மெய்யநாதன் பள்ளி மாணவிகளுடன் இணைந்து இன்று அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றம் தலைவர் ஜானகி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.