அன்பில் அறக்கட்டளை மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து பாய்லர் அருகே உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜோசப் கண் மருத்துவமனை சார்பாக மூன்று நாட்களாக நடைபெறவிருக்கும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமை துவக்கி வைத்துசிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார் .
மேலும் இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது…. மாணவச் செல்வங்கள் ஆகிய உங்களுக்கு கண் என்பது வாழ்வில் ஒரு முக்கியமான உறுப்பு என்றும் ஆகவே அதை தாங்கள் பாதுகாக்க வேண்டும் என்றும் இதே போல் மாணவச் செல்வங்கள் ஆகிய நீங்கள் தொலைக்காட்சி மற்றும் கம்ப்யூட்டர்களை அதிக நேரம் பார்ப்பதால் ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபடுவதாலும் உங்களது கண் பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும். எனவே மாணவச் செல்வங்களாகிய நீங்கள் அவ்வப்போது ஆசிரியர்கள் கூறும்
பாடங்களை வகுப்பறையிலேயே படித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார், மேலும் ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் மூன்று நாட்களாக நடைபெறும் இந்த முகாமில் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள 2151 மாண பரிசோதனை. செய்யப்படுவதாகவும். முதல் நாளான நேற்று 700 மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் கூறினார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா,மாவட்ட கல்வி அதிகாரி சங்கரநாராயணன், மற்றும் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ் துணைத்தலைவர் பழனியாண்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பரிமளா உட்பட பள்ளி மாணவ மாணவிகள் கொண்டனர்.