திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். திருவெறும்பூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 8.80 லட்சம் மதிப்பிலான இரண்டு வகுப்பறைகளை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இன்று திறந்து வைத்தார். மேலும் அதே
பள்ளிவாளகத்தில் 2.47 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், உதவி இயக்குனர் ஊராட்சிகள் கங்காதரணி திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷன்சிங், வட்டார கல்வி அலுவலர்கள் ஜெஹ்ரா பர்வீன், ரெஜி பெஞ்சமின், மாவட்ட கவுன்சிலர் கே எஸ் எம் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.