கரூர் மாவட்டத்தை சேர்ந்த பிரிஷா என்ற பெண் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் கடந்த 04.08.23 முதல் 17.08.23 வரை Telegram ல் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி முழு முகவரியை பெற்றுக்கொண்டு Youtube -ல் Subscribe செய்வதற்கு ரூ.50/- வீதம் வழங்கப்படும் இடையே Merchant Task வரும் எனவும் அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி Task முடித்தவுடன் நாம் செலுத்திய தொகை மற்றும் லாபம் பெற்று கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்,தொடர்ந்து மர்ம நபர்கள் Online மூலம் நம்பிக்கை மோசடி செய்து ரூபாய்10 லட்சத்து 64 ஆயிரத்து 20 ரூபாய் (10,64,020)ஏமாற்றி எடுத்துக் கொண்டனர் என பாதிக்கப்பட்ட அந்த பெண் கரூர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் 04.09.2023 அன்று புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்ற எண் 06/2023 ச/பி 420 IPC r/w 66 D IT Act 2008 ன் படி வழக்கின் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர் விசாரணையில் திண்டுக்கல் மாவட்ட சேர்ந்த பாலாஜிராகவன் மற்றும் வேலூர் மாவட்ட சேர்ந்த மோகன்குமார் என 2 நபர்களை இவ்வழக்கு சம்மந்தமாக சைபர் க்ரைம் போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது.
சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அம்சவேணி தலைமையில் தனிப்படை அமைத்து தேடப்பட்டது.
இந்த இரண்டு நபர்களின் செல்போன் டவர் கேரள மாநிலத்தில் காண்பித்ததால் கேரளா விரைந்த போலீசார், கேரளா மாநிலம் பாலக்காட்டில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இருவரையும் கரூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி கரூர் நீதித்துறை நடுவர் எண் – 2 அவர்கள் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து பொது மக்கள் யாறும் Facebook, Youtube, Telegram, Instagram ஆகியவற்றின் மூலம் Online Job, Online Trading, பணத்தை Invest செய்து Task Completion முடித்தால் அதிக லாபம் பெறலாம் போன்ற போலியான Website-களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் இது போன்று ஏமாற்றும் நபர்களை நம்ப வேண்டாம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகர் அறிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற சம்பவம் நடைபெற்றால் தாமதிக்காமல் சைபர் கிரைம் இலவச அழைப்பு எண்ணான 1930 அல்லது WWW.Cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்குமாறு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.