கரூர் மாவட்டம் புகளூர் காகித புரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்குள் ஏராளமான காப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமார் ரூ 2 லட்சத்துக்கும் மேற்பட்டகாப்பர் வயர்கள் ,காப்பர் ட்யூப்கள், காப்பர் நைப் உள்ளிட்ட வயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதை அறிந்த டிஎன்பிஎல் காகித ஆலை அதிகாரிகள் இது குறித்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை ஆய்வு செய்தபோது 5 பேர் காம்பவுண்ட் சுவற்றுக்கு வெளியே ஏணி வைத்து சுவற்றின் மீது ஏறி அங்கிருந்து காகித ஆலையின் உள்சுவற்றுக்குள் இறங்கி டிஎன்பிஎல் காகித ஆலைக்குள் இருந்த ரூ2 லட்சம் மதிப்பிலான வயர்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து டிஎன்பிஎல் காகித ஆலை விற்பனை அலுவலர் (கழிவு பொருட்கள்) அமரன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து விசாரணை செய்ததில் காப்பர் வயர்களை திருடி சென்ற கோபிநாத்( 31) கோபி( 30), பூபதி (28 ) சரவணகுமார் (29) . ஜெகதீஷ்( 40) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் அங்குள்ள கிளைச்சிரையில் 5 பேரையும் அடைத்தனர்.