சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 176வது ஆராதனை விழா இன்று மாலை 6 மணிக்கு திருவையாறில் உள்ள அவரது சமாதி அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தொடங்குகிறது. புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் விழாவை தொடங்கி வைக்கிறார். தியாகபிரம்ம மகோத்சவ சபா அறக்கட்டளை தலைவர் வாசன் எம்.பி, தஞ்சை கலெக்டர் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தியாகபிரம்ம மகோசவ சபா நிர்வாகிகள் விழாவில் பங்கேற்கிறார்கள்.
வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெறும். இதில் 500க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அவருக்கு இசையஞ்சலி செலுத்துவார்கள்.அன்றைய தினம் விழாவில் தமிழக கவர்னர் ரவி கலந்து கொள்கிறார். பஞ்சரத்ன கீர்த்தனை விழாவையொட்டி 11ம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை கலெக்டர் அறிவித்து உள்ளார். அதற்கு பதிலாக 21ம் தேதி வேலைநாளாக கலெக்டர் அறிவித்துள்ளார்.