திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பில் மதுபானம் , கள்ளச்சாராயம் அருந்துவதால் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் கிராமிய இசை கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் ஆனந்த வேதவள்ளி இசை கலைஞர்கள் உடன் கலந்துகொண்டு கிராமிய இசை மூலம் மது மற்றும் போதை பொருகள்ளை ஏற்படும் தீமைகள் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காவல் ஆய்வாளர் பாடல் படியதை பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று கவனித்தனர்.