உலககோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று கொல்கத்தாவில் 2வது அரையிறுதிப்போட்டி தொடங்கி உள்ளது. டாஸ்வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பந்து வீசுகிறது. கேப்டன் பவுமா, டிகாக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
முதல் ஓவரில் 4வது பந்தில் பவுமா விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் டி காக் 14வது பந்தில் 3 ரன்களில் , ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து மார்க்ரம், வெண்டர் டு சன் ஆகியோர் பொறுப்புடன் ஆடிவருகிறார்கள். 9 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது.10 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா18 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது 10வது ஓவரில் ஒரே ஒர ரன் மட்டுமே தென் ஆப்ரிக்கா எடுத்தது. தொடர்ந்து தென் ஆப்ரிக்க வீரர்கள் நிதானமாக ஆடி வந்தனர்.
10.5வது ஓவரில் மார்க்ரம் , வார்னரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 20 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு பதில் க்ளாசன் இறங்கினார். தென் ஆப்ரிக்கா 22 ரன் எடுத்திருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலையில் 11.5 ஓவரில் டுசன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் தென் ஆப்ரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தென் ஆப்ரிக்கா திணறி வருகிறது. லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது . அதற்கு பழிதீர்க்கும் வகையில் இன்று ஆஸ்திரேலியா சிறப்பான பந்து வீச்சு மூலம் தென் ஆப்ரிக்காவை திணறடித்து வருகிறது.
இதில் வெற்றி பெறும் அணி 19ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.