தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 180 படங்களில் நடித்தவர் நடிகை விஜயசாந்தி. இவரை லேடி ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைப்பார்கள். 1997ல் பாஜகவில் சேர்ந்த விஜயகாந்தி அந்த கட்சியின் மகளிர் பிரிவு செயலாளராக பணியாற்றினார். சந்திரசேகரராவ் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொடங்கியதும் 2005ல் அந்த கட்சியில் சேர்ந்து எம்.பி. ஆனார். பின்னர் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்த விஜயசாந்தி, அதன் பின்னர் மீண்டும் பாஜகவில் சேர்ந்தார்.
30ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜயசாந்திக்கு பாஜக சீட் வழங்கவில்லை. எனவே அவர் பாஜகவுக்கு முழுக்கு போட்டு விட்டார். விரைவில் அவர் ராகுல் முன்னிலையில் காங்கிரசில் சேரலாம் என தெரிகிறது. இதுதவிர அனைத்து கட்சிகளுக்கும் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு வந்த விஜயசாந்தி, இப்போது அடுத்த ரவுண்ட்டை தொடங்க காங்கிரசில் இணைகிறார்.