தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி பட்டுக்குடியை இணைக்கின்ற மண்ணியாற்றின் மீதுள்ள பாலம் பழுதடைந்து எந்நேரத்திலும் இடியும் தருவாயில் உள்ளது. 40 ஆண்டுகளை கடந்தப் பாலம் என்பதால் இதை இடித்து விட்டு புதிதாக கட்ட அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் இந்தப் பாலத்தை தான் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாகனப் போக்குவரத்தும் இந்தப் பாலத்தின் வழி நடந்து வருகிறது. பாலம் பழுதடைந்து விட்டதால், இந்த பாலத்தை கடந்துச் செல்லும் போது எங்கே இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்தப் பாலத்தை இடித்து விட்டு புதிதாக தரமாக கட்ட வேண்டும். பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு கொள்ளிடக் கரையோரமுள்ள கிராமங்களாகும். பல நூறு மக்கள் வசிக்கின்ற இந்த கிராமங்களை இணைக்கின்ற கரையோரமுள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. ஏராளமான மக்கள் பயன்படுத்தி வரும் இந்தச் சாலையை விரைந்துப் போட வேண்டும். இதேப் போன்று கல்யாண சுந்தரம், ராமலிங்கம், சண்முகம் எம்.பி நிதியிலாவது கூடலூர், புத்தூரில் சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும் என்றனர்.