சென்னையில் நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகர், கோபாலபுரம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வசுந்தரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீடு, அவரது நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெறுகிறது. கோபாலபுரத்தில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் வினோத் கிருஷ்ணா என்பவரது வீட்டிலும் ஐ.டி.சோதனை நடைபெற்று வருகிறது.