திண்டுக்கல் நத்தம் அடுத்த கோசுக்குறிச்சி கரையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் ஆடைகளை அயர்ன் செய்யும் பணி செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முத்துலட்சுமி என்ற மனைவியும், நதியா என்ற மகளும் இருந்தனர். ஈஸ்வரனின் தாய் செல்லாயி இவர்களுடன் வசித்து வந்தார்.
குடிப்பழக்கத்திற்கு ஆளான ஈஸ்வரன் நேற்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை தாய் செல்லாயி தட்டிக் கேட்டுள்ளார். இரவு முழுவதும் இந்த சண்டை தொடர்ந்திருக்கிறது. விடிகாலை 2 மணியளவில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட ஈஸ்வரன் பாய்ந்திருக்கிறார்.
அதனையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தவர், அருகில் இருந்த வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த 80 வயதான முதியவர் பெரியனாண்டி அம்பலம் என்பவரையும் ஈஸ்வரன் வெட்டியுள்ளார். இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளையும் சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.