தமிழ்நாட்டில் 10,11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வு அட்டவணையை சென்னையில் இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
பிளஸ்2 பொதுத்தேர்வு 2024 மார்ச் 1ம் தேதி தொடங்கி மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 6ம் தேதி வெளியிடப்படும்.
11ம் வகுப்பு தேர்வு 2024 மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 24ல் தொடங்கி ஏப்ரல் 8ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 10ம் தேதி வெளியிடப்படும். 10 ம் வகுப்பு செய்முறைத்தேர்வு பிப்ரவரி 23 முதல் 29ம் தேதி வரை நடைபெறும்.
2024ல் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், நாம் முன் கூட்டியே தேர்வு தேதியை அறிவித்து விட்டோம். எனவே தேர்தல் ஆணையம் இந்த தேதிகளை அனுசரித்து தேர்தலை நடத்த வாய்ப்பு உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பும், தேர்வு தேதியும் ஒரே நேரத்தில் இருந்தால் அதன் பிறகு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினாா்.
பொதுத் தேர்வுக்கான அட்டவணை
செய்முறை தேர்வு தேதி…
10th Std : 23-2-2024 to 29-2-2024
11th Std : 19-2-2024 t0 24-2-2024
12th Std : 12-2-2024 to 17-2-2024
பொதுத் தேர்வு தேதி….
10th Std: 26-3-2024 to 8-4-2024
11th Std: 4-3-2024 to 25-3-2024
12th Std: 1-3-2024 to 22-3-2024
தேர்வு முடிவுகள் வெளியீடு…
10th Std : 10-5-2024
11th Std : 14-5-2024
12th Std : 6-5-2024