கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் வாந்தி மற்றும் வயிற்று போக்கு காரணமாக நேற்று மாலை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸில் வந்திறங்கிய செந்தில் பாலாஜியை போலீசார் கைத்தாங்கலாக பிடித்து வீல்சேரில் அமர வைத்து அழைத்து சென்றனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இதய பிரச்சனைக்கான எக்கோ உள்பட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி அட்மிட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரில் நலம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை என்கிற பெயரில் அமலாக்கத்துறையினர் தொடர் டார்ச்சர் காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக ஒமாந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி உறவினர்கள் நண்பர்கள் என யாரையும் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது..