திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் அரசு அனுமதியில்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக திருவெறும்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அந்த பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து சென்ற பொழுது திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாஸ்பேட்டை கோட்ர பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வபிரபு (32) பாத்தாளப் பேட்டையை சேர்ந்த முருகேசன் மகன் சூரிய பிரகாஷ் (22) ஆகிய இரண்டு பேர் 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தப்போது கையும் களவுமாக திருவெறும்பூர் போலீசார் பிடித்து திருவெறும்பூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.