Skip to content
Home » கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்’… – உதயநிதி ஸ்டாலின்!

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்’… – உதயநிதி ஸ்டாலின்!

  • by Senthil

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். பாசிஸ்ட்டுகளை விரட்டி மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்” என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்துவருகிறார். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் அருகே இரு சக்கர வாகனப் பிரசார பேரணியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த பேரணியை துவக்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் 183 வாகனங்கள் பங்கேற்று 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லவிருக்கிறது. மொத்தம் 13 நாள்களில், 8,647 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்தப் பேரணி, வரும் 27-ம் தேதி சேலத்தில் நிறைவடைய இருக்கிறது. இதனிடையே தனது எக்ஸ் தளத்தில், ‘’கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம்!

மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.

ImageImage

13 நாட்கள் – 234 தொகுதிகள் – 504 பிரச்சார மையங்கள் – 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி – மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!