மழைக்காலம் தொடங்கிய நிலையில் பல்வேறு நோய்கள் பரவி வரும் கால சூழலில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் வெளி நோயாளி பதிவு செய்வது முதல் உள் நோயாளிகளின் ரத்தப் பரிசோதனை செய்வது வரை போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் காலதாமதம் ஆவதால் ஆங்காங்கே நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்று நோயாளிகள் மத்தியில்
பெரும் குற்றச்சாட்டு எழும்புகின்றது. இது குறித்து அரசு தலைமை மருத்துவமனை அதிகாரியிடம் கேட்ட பொழுது போதிய ஆட்கள் இல்லாத காரணத்தினால் இதுபோன்ற நிலைமைகள் அடிக்கடி வருகிறது என கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு இந்நிலை மாற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.