தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே அவற்றை பிடித்து அப்புறப்படுத்த தனிக்குழு அமைக்க வேண்டும் என்று தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் முகமது இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது… தஞ்சாவூர் நகரத்திலும் திருவையாறு, பாபநாசம், பட்டுகோட்டை, அம்மாபேட்டை, திருக்காட்டுப்பள்ளி, மெலட்டூர், கும்பகோணம், பூதலூர் மற்றும் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசிய நெடுஞ் சாலை, மாநில நெடுஞ் சாலை, கிராம புறச்சாலை என மாவட்டத்தில் உள்ள சாலைகளில் இரவு, பகல் என்று மாடுகள் கூட்டமாக படுத்து கிடக்கிறது.
பெரிய காளை மாடுகள், சிறு கன்று மாடுகள் என கூட்டம் கூட்டமாக சாலையில் படுத்து கொண்டு வாகனங்களுக்கும், பேருந்துகளுக்கு டூவீலர், லாரிகளுக்கு இடை யூறாக உள்ளது. இதனால் நிறைய விபத்துக்கள் ஏற்படுகிறது. மாவட்டத்தில் இது நீண்ட காலமாக பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே உடனடியாக அனைத்துக் சாலைகளிலும் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தனிக்குழு அமைத்து உடனடியாக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அரசு அதிகப்படியான அபராதத்தை விதிக்க வேண்டும். குறிப்பாக அரசு கால்நடை மாடுபட்டிகளில் அடைத்து ஒவ்வொரு மாடுகளுக்கும் குறைந்தது ரூ. 25. 000 ஆயிரம் வீதம் அபதாரத்தை விதித்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.