கோவை, சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வீட்டு அருகில் குடியிருக்கும் செவிலியர் பணிப் பெண்ணிற்கு வீடு பார்ப்பதற்காக அதே பகுதியில் உள்ள பொங்கியம்மாள் வீதி உள்ள வாடகை வீடு ஒன்றில் வீடு வாடகைக்கு விடப்படும் என போர்டு வைத்து உள்ளனர். அதைப் வைத்து அந்த பெண் புரோக்கர் செவிலியர் குடும்பத்தை அழைத்து சென்று உள்ளார். அவர்களுடன் சென்ற கைக் குழந்தை ஒன்று கதவின் அருகே உள்ள ஜன்னல் கதவை திறந்து உள்ளார். வீட்டின் குடியிருந்த அருண் என்பவர் யாருடா கதவை திறப்பது எங்கள் வீட்டை என்று சத்தம் போட்டபடி வெளியே வந்து உள்ளார். உடனே அதற்கு அவர்கள் தாங்கள் வீடு பார்க்க வந்து உள்ளதாகவும், கைக் குழந்தை தெரியாமல் தவறுதலாக வீட்டின் ஜன்னல் கதவை திறந்ததாகவும் கூறி உள்ளனர். இதை கேட்டு அந்த வீட்டில் குடியிருந்த அருண் என்பவர் அவர்கள் கூறியதை கண்டு கொள்ளாமல் அவர்களை சரமாரியாக தாக்கி உள்ளார். அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பின்னர் இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வீட்டில் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் இவர்களை சத்தம் போட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் கோவை சிவானந்தா காலனி சி 4 ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.