நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வேளாங்கண்ணியில் மட்டும் 17 செண்டி மீட்டர் அளவிற்கு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக வேளாங்கண்ணி பூக்கார தெரு சுனாமி குடியிருப்பில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கனமழையால் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து
காணப்பட்டது. மேலும் மழைநீர்,கழிவு நீரும் சேர்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத நீர்மூழ்கி மோட்டார் மூலம் மழைநீரை வடிய வைத்து வருகின்றனர் .
மேலும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு அதிகாரிளிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இதை போல் மழை வெள்ள காலங்களில் தொடர்ந்து இதுபோல குடியிருப்புகளில் மழைநீர் சூழ்வதாகம்,நிரந்தரமாக தீர்வாக சாலையை தருவதுடன் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் . சுனாமி குடியிருப்பு பகுதி வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.