திருச்சி பொன்மலையில் நடந்து சென்றவரிடம் வேண்டுமென்றே வம்பு இழுத்து அடித்து உதைத்து தாக்கிய 2 பேர் கைது
திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரை சேர்ந்தவர் செல்லதுரை வயது (27) இவர் நேற்று பொன்மலை கணேசபுரம் ஆர்ச் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அவரை வழிமறித்த 3 பேர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த செல்லதுரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து செல்லதுரையை தாக்கிய பொன்மலை தங்கேஸ்வரி நகர் வடக்கு தெருவை சேர்ந்த பரதன் (28) அதே பகுதியை சேர்ந்த முகேஷ் குமார் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்