Skip to content
Home » திருச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி…

திருச்சி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து ரயில்வே ஊழியர் பலி…

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ராக்கூர் அழகு நாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்சின்னராசு(வயது27)
இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர் இவர் ரெயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இதற்க்காக லால்குடியில் உள்ள பரமசிவபுரம் 8 வது குறுக்குத் தெருவில் மாடியில் வீடு வாடகைக்கு எடுத்து
தங்கி இருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மாடியில் இருந்த சின்னரசு எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *