ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரை மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பேரறிவாளன் முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிசந்திரன் ஆகிய 7 பேரை 32 வருட சிறை வாசத்திற்கு பின்னர் அதிரடியாக விடுதலை செய்தது.
இவர்களில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்த முகாமில் இருந்து தங்களை விடுவிக்க கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.