புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் , சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நவம்பர்-14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 உலக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவ.20 சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நடைபயணத்தினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.