நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் நேற்று காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர போலீசார், அவரது வீட்டிற்கு சென்று பார்த்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு, எந்த அசம்பாவிதமும் நடந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த சகோதரியான இவர் கடந்த 1983-ம் ஆண்டு நியு ஜெர்சியில் பெடரல் ஜட்ஜாக இருந்து, கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர். சகோதரியின் இறப்பு குறித்து டொனால்ட் டிரம்ப் இதுவரை எந்த அறிக்கையும், இரங்கலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.