மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில் தவிர இறால் பண்ணை தொழிலும் அதிக அளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
சீர்காழி அருகே காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி பூம்புகார் காவிரி சங்கமத்துறை அருகே 150-க்கும் மேற்பட்ட இறால் குட்டைகள் அமைந்துள்ளன. அங்கு மந்தகரையைச் சேர்ந்த தனமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான 2 இறால் குட்டைகள் உள்ளன.
இந்த சூழலில் தனமூர்த்தியின் இறால் குட்டையில் நேற்று இறால்கள் இறந்து மிதந்தன. மர்ம நபர்கள் விஷம் கலந்ததால் தான் இறால்கள் இறந்ததாக கூறப்படுகிறது.