நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு டேங்கர் லாரி, 2 சரக்கு லாரிகள் என 3 லாரிகள் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றனர்.
அவற்றில் ஒரு லாரியில் பல லட்சம் மதிப்பிலான காட்டன் துணிகள் இருந்தன. மற்ற இரு லாரிகளில் பொருட்கள் எதுவும் இல்லை. இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென 3 லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.