இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்க உள்ளன.
இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து அசத்தி வரும் ஜடேஜா இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடி 16 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற அனில் கும்ப்ளேவின் 27 வருட மற்றும் யுவராஜ் சிங்கின் 12 வருட சாதனையை ஜடேஜா உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த சாதனை பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 16 (2023) 2. அனில் கும்ப்ளே : 15 (1996) 2. யுவராஜ் சிங் : 15 (2011) 3. குல்தீப் யாதவ் : 14 (2023) 3. மணிந்தர் சிங் : 14 (1987) இந்திய அணி அடுத்ததாக வரும் 15ம் தேதி அரையிறுதியில் நியூசிலாந்துடன் விளையாட உள்ளது.