Skip to content
Home » திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…..18ல் சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…..18ல் சூரசம்ஹாரம்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்தும் திருவிழா கந்த சஷ்டி திருவிழாவாகும். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா  இன்று(திங்கட்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜைகளாகியது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி , கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் விரதத்தை துவக்கினர். இதனால் திருக்கோயில் வளாகமே  பக்தர்கள் வெள்ளத்தில்  நிரம்பி வழிகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக  வரும்  18-ம் தேதி சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவல் குழுத்தலைவர் ரா.அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!