மகாராஷ்டிர மாநிலம் புனே நகரத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் சோம்நாத் ஜெண்டே. இவர் கடந்த பல மாதங்களாக ட்ரீம் 11 கிரிக்கெட் என்கிற ஆன்லைன் விளையாட்டில் தீவிரமாக இருந்துள்ளார். இதன் மூலம் சோம்நாத் ஜெண்டேவிற்கு ரூ.1.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டில் எஸ்ஐ சோம்நாத் ஜெண்டே அதிக தொகையை வென்றார் என்ற செய்தியை சம்மந்தப்பட்ட நிறுவனம் விளம்பரப்படுத்தியது. இது தொடர்பான வீடியோ புனே போலீசாருக்கும் கிடைத்தது. இது தொடர்பாக புேன துணை கமிஷனர் ஸ்வப்னா கோர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் எஸ்ஐ சோம்நாத் ஜெண்டே அனுமதியின்றி ஆன்லைன் விளையாடியது, குறிப்பாக பணி நேரத்தில் ஆன்லைன் விளையாடியதும் தெரியவந்தது. இறுதியாக பணம் சம்பாதித்தது குறித்து சீருடையில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சோம்நாத் ஜெண்டே உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.