Skip to content
Home » கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

கரூர் வீதிகளில் மக்கள் வெள்ளம்…ட்ரோன் காமிரா மூலம் போலீஸ் கண்காணிப்பு

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி ஜவுளி, பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்க கரூர் கடைவீதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது.  கரூர் நகர மக்கள் மட்டுமல்லாமல், கரூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளான பரமத்தி,அரவக்குறிச்சி,வேலாயுதம்பாளையம்,கடவூர்,தரகம்பட்டி,வெள்ளியணை,புலியூர் கிருஷ்ணராயபுரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொது மக்கள் தீபாவளிக்கு தேவையான பொருட்களை கடைவீதிகள் வாங்கினர்.
ஜவஹர் பஜார், மேற்கு பிரதட்சண  சாலை,கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில்  மக்கள் சாரை சாரையாக வந்து  கடைகளில் பொருட்களை கொள்முதல் செய்தனர்.

ஜவஹர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தற்காலிகமாக 500-க்கு மேற்ப்பட்ட தரைக்கடை போடப்பட்டு, ஜவுளி துணி மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை  ஜோராக  நடைபெற்று வருகிறது. .

கூட்டம் நிறைந்த முக்கிய வீதிகளில்  கண்காணிப்பு கோபுரம் அமைத்து , 50 CCTV கேமரா மற்றும் 2 ட்ரோன் கேமரா என 1000 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *