திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள எழில் நகர் பகுதியில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலை நேற்று இரவு 8:45 மணி அளவில் கோவிலை குருக்கள் மற்றும் கோவில் கமிட்டி தலைவர் ஆகியோர் பூட்டி விட்டு சென்ற நிலையில் இன்று காலை 7 மணியளவில் கோவிலை குருக்கள் மெயின் கேட்டில் இருந்த இரண்டு பூட்டுகளை திறந்து உள்ளே சென்ற பொழுது கோவில் கருவறை முன்பு இருந்த கிரில் கேட்டில் 2 பூட்டுகள் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ந்தார். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் கருவறையின் மரக் கதவில் இருந்த பூட்டும் இல்லாமல் இருந்த நிலையில் அருகில் இருந்த அலுவலக அறையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்ததால் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் 20 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. கோவில் நிர்வாகத்தினர் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்ததை அடுத்து போலீசார் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது