திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து நெல்லை வரை செல்லும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்கு பட்டாசு மற்றும் வெடிக்கும், எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்லக்கூடாது மேலும் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும், அவ்வாறு பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்பவர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சியில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கோட்ட மேலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில் :
ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம், ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், விதிகளை மீறுபவர்கள் மீது 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். மதுரையில் நடந்த விபத்தை தொடர்ந்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும் பலரும் ரயில்களில் கேஸ் சிலிண்டர்கள் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ரயில்களில் உள்ள மொபைல் சார்ஜிங் பாயின்ட் களில் தண்ணீர் சுட வைப்பது மற்றும் சமையல் செய்வது போன்ற செயல்களில் பயணிகள் ஈடுபடுகின்றனர், முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் அவ்வாறு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். ரயிலில் புகை பிடித்தல்
தொடர்பாக இரண்டு வழக்குகளும் கேஸ் சிலிண்டர் கொண்டு சென்றதாக இரண்டு வழக்குகளும் இதுவரை பதியப்பட்டுள்ளதாகவும், ரயில்வே லெவல் கிராசிங் இல் கேட் மூடிய பிறகு கேட்டை பிடித்து சேதப்படுத்துவதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டு ரயில்கள் தாமதம் மற்றும் பல சிக்கல்கள் ஏற்படுகிறது அதேநேரம் கால்நடைகளை ஆங்காங்கே மேய்ச்சலுக்கு விடுவதால் தொடர்ந்து ரயில்கள் தாமதம் மற்றும் பல இன்னல்களை ரயில்வே துறை சந்திப்பதாகவும் இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடாமல் தங்களது கால்நடைகளை பாதுகாப்பாக மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துக் கொண்டார். மேலும் கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.