தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 வழங்கும் நிகழ்வினை இன்று (10.11.2023) தொடங்கி வைத்ததை தொடர்டந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கல்லூரி கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் பணம் எடுக்கும் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சி.இராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.சியாமளாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிக்ச்சியில் போக்குவரத்துத்துறை அசை்சர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் 67 விழுக்காடு பயனாளிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள். மேலும் இதுவரை முதியோர் உதவித்தொகை திட்டத்தின் மூலம் 45,22 நபர்களுக்கு தலா ரூ.1200 ம், தொழிலாளர் நல அலுவலகத்தின் மூலம் 3,986 நபர்களுக்கு தலா ரூ.1200 ம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் 1,09,266 நபர்களுக்கு தலா ரூ.1000 மும் என பல்வேறு திட்டங்களின் மூலம் மொத்தம் 1,58,474 நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
மகளிர் நலனை கருத்தில்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் வரலாற்றுச்சிறப்பு மிக்க இத்திட்டத்தினை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் (பொ) சத்தியபால கங்காதரன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீல்ராஜ், நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர்கள் மீனா அண்ணாத்துரை(பெரம்பலூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், பேரூராட்சி தலைவர்கள் ஜாகீர்உசேன் (லெப்பைக்குடிக்காடு), சங்கீதா ரமேஷ் (குரும்பலூர்), பாக்கியலட்சுமி (பூலாம்பாடி), இர.வள்ளியம்மை(அரும்பாவூர்), மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், மரு.கருணாநிதி, நகர்மன்றத் துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், அனைத்து முதல்நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.