தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சங்கச் செயலாட்சியர் சின்ன பொண்ணு தலைமை வகித்து வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர் இந்திரஜித் கலந்துக் கொண்டு 1,715 உறுப்பினர்களுக்கு, 14 சதவீத பங்கு ஈவுத் தொகையாக ரூ 4, லட்சத்து 45 ஆயிரம் வழங்கினார். இதில் சங்கம் 2006 – 2007 ம் ஆண்டில் வைப்புகள் திரட்ட அனுமதியில்லாத நிலையில் இருந்தப் போது, அப்போதைய கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர், இணைப் பதிவாளர் லோகநாதன் வைப்புகள் பெறுவதற்கான உத்தரவை பெற்றுத் தந்தார். இதேப் போன்று சங்க வளர்ச்சிக்கு பல வகையில் உதவிய முன்னாள் முன்னாள் தஞ்சாவூர் மண்டல இணைப் பதிவாளர் சுப்ரமணியன் நினைவு கூறப் பட்டனர்.
இதில் உதவி கள மேலாளர்கள் சங்கர் , மகாலெட்சுமி மற்றும் திரளான அ வகுப்பு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
சங்கச் செயலர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.