திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள HEPF தொழிற்சாலை நுழைவாயில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் எம்ப்ளாயீஸ் யூனியன் உதவி தலைவர் விஜயன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தொழிலாளர்கள் மீது தொடுத்து வரும் அடக்குமுறைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று தொழிற்சாலை நுழைவாயில் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
அப்போது இந்த ஆண்டிற்கான உற்பத்தி இலக்கை அடைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான மூலப் பொருட்கள் உடனடியாக தரவேண்டும். தேவையான Tools and Gauges வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நிர்வாகம் இந்த கோரிக்கைகளை சரிசெய்ய வில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு போவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதில் எம்ப்ளாய்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் இரணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக பங்கெடுத்தனர்.