விலைவாசி உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலையில் ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முடியாத அவல நிலையில் உள்ளதை எடுத்துரைக்கவும், விலைவாசி வியர்வை குறைக்க வலியுறுத்தியும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்த மக்களுக்கு, சம்பள பாக்கியை உடன் வழங்க வலியுறுத்தியும் , அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் , பாபநாசம் அடுத்த திருக்கருக்காவூரில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்மாப்பேட்டை ஒன்றியச் செயலர் மெர்ஸி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர கலைச்செல்வி பங்கேற்று கண்டன உரையாற்றினார். விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாத நிலைமையை விளக்கும் வகையில், களிமண் கொண்டு, எண்ணெய்க்கு பதிலாக தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வாணலியை வைத்து பலகாரம் செய்து நூதன வடிவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பட விளக்கம்: விலை வாசி உயர்வை கண்டித்து அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
Tags:விலைவாசி உயர்வு