ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் சுப்மன் கில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டி காக் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 4-வது இடத்திலும், கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 5வது இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வான் டெர் டுசன் 7வது இடத்திலும், அயர்லாந்தின் ஹாரி டெக்டர் 8வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசன் 9வது இடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 10வது இடத்திலும் உள்ளனர்.