அர்ச்சகர் நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் உள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற ஆதி சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விவகாரம் என்பதால் சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கத்துக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என்று உத்தரவிட்டனர். தொடந்து இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.