பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் கல்லூரிகளிலேயே கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்கும் முகாமினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் இன்று (07.11.2023) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் பொருளாதார ரீதியாக எந்த உதவி வேண்டுமானாலும் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் கல்லூரிகளில் பயிலும் கல்வி கடன் தேவையுள்ள மாணவ,மாணவிகள் எங்கும் அலையாமல் தங்களது கல்லூரிகளிலேயே வித்யலட்சுமி போர்டல் என்ற செயலியின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளும் முகாம் நேற்று (07.11.2023) முதல் தொடங்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு கல்வி கடன் தேவைபடும் மாணவ,மாணவிகளுக்கு கல்லூரியின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்பித்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் தேவைபடும் மாணவ,மாணவிகளுக்கு கல்லூரியின் மூலமே
விண்ணப்பித்து கொடுக்கப்படும் முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தகுதி மற்றும் விருப்பமுள்ள அனைத்து மாணவ,மாணவிகளும் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் எனவும், மாணவ,மாணவிகளுக்கு செயலி மூலம் கல்வி கடன் விண்ணப்பிக்க நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் விரைவாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி முதல்வர் வேல்முருகன் மற்றும் பலர் கொண்டனர்.