சென்னையை அடுத்த ஆவடி மாநகரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பூந்தமல்லி போலீஸ் ஸ்டேசன் வழக்கில் சுமார் 23 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த டேவிட்பினு என்பவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் டேவிட்பினு தனது பெயரை பெயரை சசி (எ) காநாடு சசி என்று மாற்றி கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டாரக்கரா பகுதியில் வசித்த வந்ததும் தற்போது திருட்டு வழக்கில் கொட்டாரக்கரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை எஸ்ஐ, தினகரன், ஏட்டு சுரேஸ்குமார். ஆகியோரை அடங்கிய தனிப்படை கேரள மாநிலம் கொட்டாரக்கரா சிறைக்கு சென்று அடைக்கப்பட்டிருப்பது டேவிட் பினுதான் என்பதை உறுதி செய்துசம்மன் கொடுத்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 23 வருடங்களாக தேடப்பட்டு வந்த திருட்டு குற்றவாளியான டேவிட்பானுவை கண்டுபிடித்த எஸ்ஐ, ஏட்டுவை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு வெகுமதி வழங்கினார்.