கோவையை சேர்ந்த ஒருவர் தனது காரை விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்தார். அதை பார்த்து நான்கு பேர் தாங்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து பேசுவதாக கூறியதுடன், காரை பார்க்க உள்ளதாக தெரிவித்தனர். உடனே அவரும் கோவை கணபதிக்கு வரச் சொன்னார். அதன்படி கணபதிக்கு வந்த நான்கு பேர் அந்தக் காரை பார்த்தனர். உடனே அவர்களுக்கு கார் பிடித்திருப்பதாகவும் அதை ஓட்டி பார்க்க விரும்புதாகவும் கூறினார்கள்.
காரின் உரிமையாளரின் மகன் 25 வயது வாலிபர் காரை ஓட்ட அந்த காரை வாங்க வந்த நான்கு பேரும் பின்னால அமர்ந்து இருந்தனர். அந்த கார் கோவை சத்தி சாலையில் உள்ள வணிக வளாகம் அருகே சென்ற போது திடீரென கத்தியால் குத்தி விட்டு பின்னர் அந்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு காரை திருடி சென்றதாக தெரிகிறது. மேலும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து அந்த வாலிபர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்தனர், அப்போது
அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது கோவில்பாளையம் சந்தை பகுதியில் தாறுமாறாக ஓட்டியதால் அந்த சந்தைக்கு வந்த பொது மக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர். இதில் சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.