அமைச்சா் எ.வ. வேலுக்கு சொந்தமான கல்லூரி, வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிலையில் இன்று திருச்சி தென்னூர் அண்ணாநகரில் மணப்பாறை சாமிநாதன் என்பவரது வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. காலை 6 மணி முதல் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தென்னூர் அண்ணாநகர் சாமிநாதன் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவர், பைனான்சியர் என்றும், கூறப்படுகிறது. இவர் காபித்தூள் விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.