உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்,
நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பணிக்காக பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சத்தியபாமா பல்கலைக்கழகம் கமல்ஹாசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டரில், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – @maiamofficial தலைவர் @ikamalhaasan அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று குறிப்பிட்டுள்ளார்.