திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம் அதே போன்று பெற்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை என்பவர் தனது சொந்த ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள வயலில் மல்லிகைப்பூ பயிரிட்டுள்ளார் அதனை தினமும் காலை 7 மணிக்கு சுமார் 10 – க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூ பறித்துள்ளனர். அதனைப் போல அருகில் இருந்த வயலில் அதே பகுதியைச் சேர்ந்த அங்காண்டி என்பவரும் தனது வயலில் மல்லிகை பூ பெயரிட்டுள்ளார் அவரும் பத்திரிக்கை மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூப்பறித்துள்ளார். அப்போது சுமார் 8 மணி அளவில் கூட்டமாக வந்த விஷ வண்டுகள் பூ பறித்துக் கொண்டிருந்த அஞ்சுகம், சின்ன பொண்ணு, வளர்மதி, மலர், மூர்த்தி, ராஜா, முருகாயி, செல்வி உள்பட 25க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை கடித்தது. வலி தாங்காமல் கதறிய பெண்கள் மற்றும் ஆண்களை அருகில் இருந்தவர்கள் தங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மூலம் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சோமரசம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் கிராம மக்கள் வயலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.
Tags:ஆஸ்பத்திரி