தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை மகிமாலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் முத்து (20). தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ராஜப்பா நகர் பகுதியை சேர்ந்த மூக்கையன் என்பவரின் மகன் சரவணன் (30). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 20ம் தேதி வாகன திருட்டில் ஈடுபட்டதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் புலவர்நத்தம் பெட்ரோல் பங்க் அருகில் முத்து மற்றும் தளவாய் பாளையம் பகுதியில் சரவணன் இருவரையும் அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கரிகால சோழன் மற்றும் போலீசார் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
