திருவையாறு வட்டம் விளாங்குடி கடைவீதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் விளாங்குடி மிக பெரிய கிராமமாகும்.
இந்த இக்கிராமம் தஞ்சாவூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மேலும் பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. பள்ளி கல்லூரி மாணவி மாணவர்கள் இங்கு இருந்து தஞ்சாவூர் மற்றும் அரியலூர் திருவையாறு கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கிறார்கள்.
தினமும் பேருந்துக்கு வெயிலிலும், மழையிலும் விளாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான வண்டி கனரா மற்றும் அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சென்னை கும்பகோணம் திருப்பூர் போன்ற நெடுந்தூரம் நகரத்திற்கு செல்ல காத்திருக்கிறார்கள். வயதான பெரியவர்கள் பேருந்துகளுக்கு காத்திருத்து இருப்பார்கள். இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே விளாங்குடி பொது மக்களின் நலன் கருதி உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் துறை சட்ட மன்ற பாராளுமன்ற உறுப்பினர் நிதியிருந்து உடனடியாக பேருந்து நிலையம் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.